மும்பை: பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்ப வரை ரகசியமாக காதலித்து வந்த நடிகை ரகுல் பிரீத், தனது 31வது பிறந்தநாளில், இவர்தான் தன் காதலன் என்று அவரை சமூக வலைத்தளங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதையடுத்து வரும் ஜனவரி மாதம் ரகுல் பிரீத், ஜாக்கி பக்னானி திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ரகுல் பிரீத் கூறியதாவது: நான் சினிமாவில் நடித்தாலும், என் சொந்த வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகமாகப் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டேன்.