பணியில் பயமோ, பாரபட்சமோ இருக்காது: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி உரை

சென்னை: பணியில் பயமோ, பாரபட்சமோ இருக்காது என நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார். அவருக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் கவர்னர் ரவி, பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பதவியேற்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலரும், மூத்த வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.

பின்னர் வரவேற்பு விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி; எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன். வணக்கம், நன்றி போன்ற வார்த்தைகளை கற்றுள்ளேன்; தினமும் சில வார்த்தைகளை கற்றுக்கொடுங்கள். நேற்றுதான் தமிழ் கற்க தொடங்கினேன்; அடுத்து வரும் நாட்களில் தமிழை கற்று தமிழில் பேச முயற்சிப்பேன். இந்தியாவின் மிகப்பெரியதான அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினேன்.

பணியில் பயமோ, பாரபட்சமோ இருக்காது. இங்கு நிறைய பேச விடும்பவில்லை; ஆனால் செயலில் காட்டுவேன். தமிழகத்தில் பிறக்க வேண்டுமென கனவும் கண்டேன்; இங்கு பணியாற்றுவதன் மூலம் கனவு நனவாகியுள்ளது.

Related Stories: