நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 தமிழ்நாடு எம்.பி.க்கள் மக்களவையில் பதவியேற்பு

டெல்லி: லோக்சபாவில் தமிழ்நாட்டின் 40 எம்பிக்களும் இன்று பதவியேற்று வருகின்றனர். 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள் மக்களவையில் பதவியேற்று வருகின்றனர். திமுக கூட்டணியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.

திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில், தென்சென்னை எம்.பி.யாக தமிழச்சி தங்கப்பாண்டியன், வடசென்னை தொகுதி எம்.பி.யாக கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை தொகுதி எம்.பி.யாக தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி.யாக 7-வது முறை டி.ஆர்.பாலு, அரக்கோணம் தொகுதி எம்.பி.யாக ஜெகத்ரட்சகன், வேலூர் தொகுதி எம்.பி.யாக கதிர் ஆனந்த், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.யாக கோபிநாத், தருமபுரி தொகுதி எம்.பி.யாக ஆ.மணி, திருவண்ணாமலை தொகுதி எம்.பி.யாக சி.என்.அண்ணாதுரை பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

ஆரணி தொகுதி எம்.பி.யாக எம்.எஸ்.தரணிவேந்தன், விழுப்புரம் தொகுதி எம்.பி.யாக ரவிக்குமார், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக கலையரசன், சேலம் தொகுதி எம்.பி.யாக செல்வகணபதி, நாமக்கல் தொகுதி எம்.பி.யாக மதேஸ்வரன், ஈரோடு தொகுதி எம்.பி.யாக ஈஸ்வர மூர்த்தி பிரகாஷ், திருப்பூர் தொகுதி எம்.பி.யாக சுப்பராயன், நீலகிரி தொகுதி எம்.பி.யாக ஆ.ராசா பதவியேற்றார்.

கோவை தொகுதி எம்.பி.யாக கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி தொகுதி எம்.பி.யாக ஈஸ்வரசாமி, நாகை தொகுதி எம்.பி.யாக செல்வராஜ், சிவகங்கை தொகுதி எம்.பி.யாக கார்த்தி சிதம்பரம், மதுரை தொகுதி எம்.பி.யாக சு.வெங்கடேசன், தேனி தொகுதி எம்.பி.யாக தங்கதமிழ்ச்செல்வன், விருதுநகர் தொகுதி எம்.பி.யாக மாணிக்கம் தாகூர், ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யாக நவாஸ் கனி, தூத்துக்குடி தொகுதி எம்.பி.யாக கனிமொழி பதவியேற்றுக் கொண்டார்.

சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக திருமாவளவன், திண்டுக்கல் தொகுதி எம்.பி.யாக சச்சிதானந்தம், கரூர் தொகுதி எம்.பி.யாக ஜோதிமணி, திருச்சி தொகுதி எம்.பி.யாக துரை வைகோ, பெரம்பலூர் தொகுதி எம்.பி.யாக அருண் நேரு , கடலூர் தொகுதி எம்.பி.யாக விஷ்ணுபிரசாத், மயிலாடுதுறை எம்.பி.யாக சுதா , நெல்லை தொகுதி எம்.பி.யாக ராபர்ட் புரூஸ், கன்னியக்குமரி தொகுதி எம்.பி.யாக விஜய் வசந்த் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 40 தமிழ்நாடு எம்.பி.க்கள் மக்களவையில் பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: