காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க கர்நாடகா மறுப்பு

டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம், கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31வது கூட்டம் இன்று டெல்லியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். 4 மாநில அதிகாரிகளும் தங்கள் மாநில அணைகளின் நீர் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே காவிரி ஒழுங்காற்றுக்குழுவில் ஜூன் மதத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தது.

அப்போது இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக ஒழுங்காற்றுக்குழுவில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இந்த கூட்டத்தில் இது தொடர்பாக ஜூன் 1ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது. அனால் நிலுவையிலுள்ள ஜூன் மாதத்திற்கான 5.367 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு பிலிகுண்டுலு அணையிலிருந்து திறந்துவிட வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக அரசு வழக்கம்போல் கடந்த முறை கூறிய கருத்தையே இந்த முறையும் முன் வைத்துள்ளனர். அணையில் போதிய நீர் இல்லை, குடிநீருக்காக தண்ணீர் தேவைப்படுகிறது, தமிழ்நாடு கேட்கும் அளவிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. அணைகளின் நீர் இருப்பு பொறுத்தே தண்ணீர் திறந்துவிட முடியும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசித்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

The post காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க கர்நாடகா மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: