முல்லை பெரியாறு அணையின் ஆயுளை பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

டெல்லி: முல்லை பெரியாறு அணையின் ஆயுளை பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்செய்துள்ளது. அணையின் உறுதிதன்மையை பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கணக்கிட வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று கேரளா அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஜோய் ஜோசப் என்பவர் இது விஷயமாக தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல்செய்துவருகிறார். சில தினங்களுக்கு முன்பாக கூட முல்லைப்பெரியாறு பேபி ஆணை பகுதிகளில் உள்ள மரங்களை வெட்ட அனுமதித்து விட்டு பின்னர் அரசியல் காரணங்களுக்காக அதனை நிறுத்திவைத்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அணையின் நீர்மட்டத்தை குறைக்க என்னென்ன காரணங்கள் இருக்கிறது என்று கூறுகையில் அணையின் பாதுகாப்பு தன்மையை அவர்கள் குறை கூறியுள்ளனர். இவ்வாறாக கடந்த ஒரு மாதத்தில் 2 முறை கேரளா அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதற்க்கு பதிலடி தரும் வகையில்தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் புதிய பதில்மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கேரளா அரசு அரசியல் காரணங்களை காட்டி முல்லைப்பெரியாறு அணையில் எப்படியெல்லாம் மாற்று கருத்துக்களை முன்வைக்கின்றனர் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முக்கியமாக அணையின் உறுதியினை அதன் வயதை வைத்து கணக்கிட கூடாது. மாறாக அணையை பராமரித்தல், புதுப்பித்தல் ஆகியவை தான் அணையின் ஆயுளை நிர்ணயிப்பதாக உள்ளது. அந்தவகையில் முல்லை பெரியாறு ஆணை மிக பாதுகாப்பாக உள்ளது என்ற புதிய பதில்மனுவில் கூறியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கேராளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது கூட முல்லை பெரியாறு  அணை மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

அதேபோல முல்லைப் பெரியாறு அணையின் அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என பல்வேறு அமைப்புகள் சான்றுகள் வழங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு தொடர்பாக கேள்விகளை எழுப்புவது பொதுமக்களிடம் அச்சத்தை உருவாக்கும் என கூறப்பட்டுளள்து. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது அணை உடைந்தது போன்று முல்லைப்பெரியாறு அணைக்கும் ஏற்படலாம் என்ற எண்ணம் மிகைப்படுத்தப்பட்டது என தமிழக அரசு பதிமனுவில் கூறியுள்ளது.

Related Stories: