மோடி பற்றி விமர்சனம் அதிமுக தலைவர் படத்தை எரித்த பாஜவினர்

பரமக்குடி: பரமக்குடியில் அதிமுக முன்னாள் எம்பி அன்வர்ராஜாவின் உருவபடத்தை பாஜகவினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர்ராஜா, பிரதமர் மோடியை பற்றி விமர்சித்து பேசியதாக ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக பாஜ நிர்வாகி ஒருவர் அன்வர்ராஜாவை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்த ஆடியோவில் பேசுவது நான் இல்லை என்றும், குரல் மாற்றம் செய்துள்ளதாகவும், அந்த ஆடியோவிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என மறுப்பு தெரிவித்து வாட்ஸ்அப்பில் வெளியிடுவதாக அன்வர் ராஜா கூறியுள்ளார். ஆனால் அவர், தொடர்ந்து வெளியிடாமல் தாமதம் செய்து வந்ததால் அன்வர்ராஜாவை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் பாஜகவினர் அவரது உருவ படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்வர்ராஜாவை நீக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: