வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி: பிடிபி குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த மாதம் 24ம் தேதி ஷோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஷாகித் அகமத் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி, பாதிக்கப்பட்ட அகமதுவின் குடும்பத்தினரை சந்திக்க அனந்த்நாக் செல்ல இருப்பதாக அறிவித்தார்.  இதையடுத்து, குப்காரில் உள்ள அவர் வீட்டில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், ``ஷாகித்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மெகபூபா அனந்த்நாக் செல்ல இருந்தார். ஆனால், அவர் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. போலீசார் அவரது வீட்டின் முன்புற கேட்டை பூட்டு போட்டு பூட்டி விட்டனர். இதனால், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது வீட்டிற்கு முன்பாக போலீஸ் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

ஒப்படைப்பு

கடந்த 2018ம் ஆண்டு பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த கங்கரியான் கிராமத்தை சேர்ந்த சைப் தீன் என்பவரை பாகிஸ்தான் ராணுவம் நேற்று மனிதநேய அடிப்படையில் இந்திய ராணுவத்திடம் திரும்பி ஒப்படைத்துள்ளது.

Related Stories: