நவ.1 தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை :ஜூலை 18ம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டாலும், இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் 1968ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 14.1.1969 முதல் தான் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது.எனவே, 14.1.1969ம் நாளைத் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாட வேண்டும்.

எனவே, ஜூலை 18ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற அறிவிப்பினை திரும்பப்பெற்று, நவம்பர் ஒன்றாம் தேதியே தமிழ்நாடு நாள் என்று தொடர்ந்து இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: