நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரை நடத்த திட்டம்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெகாசஸ் உளவு விவகாரம், மருத்துவத்திற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை, வேளாண் மசோதா, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் கடந்த கூட்டத்தொடரின் போது பூதாகரமாக எழுந்ததால் பெரும்பாலான நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதனால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தொடரிலும் வேளாண் மசோதா மீதான பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கொரோனாவை ஒழிப்பதில் ஒன்றிய அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, இந்தியா, சீனா இடையிலான எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கும் என்பதால் குளிர்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: