பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிரொலி; காய்கறிகளின் விலை மளமளவென உயர்வு

டெல்லி: பெட்ரோல் டீசல் விலையேற்றம், சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, கன மழையால் வரத்து குறைவு ஆகியவற்றின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் காய்கறிகள் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. டெல்லிக்கு காய்கறிகளை விநியோகிக்கும் முக்கிய சந்தைகளாக காசிபூர், ஓக்லா ஆகிய மொத்த விலை அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன.

எரிபொருட்களின் தொடர் விலையேற்றம் எதிரொலியாக இங்கு காய்கறிகளின் வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

Related Stories:

More
>