சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை: வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்குளத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது கடந்த அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். குறிப்பாக தாம்பரம், வேளச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>