ஊராட்சி மன்றம் முற்றுகை

கும்மிடிப்பூண்டி: ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் 2,5 ஆகிய வார்டுகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 2வது வார்டில் ஜி.பரமசிவமும், 5வது வார்டில் என்.தேவராஜூம் வெற்றி பெற்ற நிலையில் காலியாக உள்ள துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் இருந்து கே.சம்பத் பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் இருந்து இ.பாலா ஆகிய இருவர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இரு வேட்பாளர்களுக்கும் தலா 3 வார்டு உறுப்பினர்கள் ஆதரவு இருந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் இ.பிரபு செலுத்தும் வாக்கே வெற்றியாளரை தீர்மானிக்கும் சூழல் எழுந்தது. சோழியம்பாக்கம் கிராம மக்கள் தலைவர், துணை தலைவர் என இருவரும் சோழியம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் இருக்க கூடாது. ஊராட்சி தலைவர் தனது வாக்கை ஏனாதிமேல்பாக்கம் பகுதியை சேர்ந்த வேட்பாளருக்கு அளிக்க வேண்டும் என கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் மறைமுக தேர்தல் 1 ஒட்டு வித்தியாசத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவராக பாலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories: