பேச்சிப்பாறையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி குட்டி யானை பரிதாப பலி: வனத்துறை விசாரணை

குலசேகரம்: பேச்சிப்பாறை  அணை நீரோடை பகுதியில் குட்டி யானை நேற்று இறந்த நிலையில் காணப்பட்டது.  இது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி  மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விடாது கனமழை கொட்டியது. இதனால் எங்கும்  வெள்ளக்காடாக காட்சியளித்தது. கோதையாறு பகுதியிலும் வரலாறு காணாத அளவு மழை  பெய்தது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரும் ஆறுகள்  மற்றும் நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோதையாறு  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் எங்கும் வெள்ளக்காடாகவே இருந்தது.

இந்த  வெள்ளத்தில் ஏராளமான வன விலங்குகளும் பாதிக்கப்பட்டன. காட்டுப்பன்றிகள்,  மிளா போன்றவை நீரில் சிக்கி தத்தளித்து கரை ஏறிய காட்சிகள் சமூக  வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை பேச்சிப்பாறை அருகே  அணைக்கு தண்ணீர் வரும் கோதைமடக்கு நீரோடையில், பிறந்து சுமார் 6  மாதங்களேயான குட்டியானை இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவம் இடம் சென்று யானை  குட்டியை பார்வையிட்டனர். இதனையடுத்து வனத்துறையினர் அந்த யானை குட்டியை மீட்டு சீரோ பாயின்ட் வன ேசாதனை சாவடி பகுதிக்கு ெகாண்டு வந்தனர். அங்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலையில் களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை  செய்தனர். இதில் அது 6 மாதமான ஆண் யானை குட்டி என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானை குட்டியின் உடல் அடக்கம்  செய்யப்பட்டது. கோதை மடங்கு பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதில் யானை குட்டி இறந்தது தெரிய வந்தது.

Related Stories: