இந்தியாவின் முதல் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

கோவா : கொரோனா பேரிடரில் பின்னடைவை சந்தித்துள்ள சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், மதுவுக்கு என்றே பிரத்யேகமான அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘All About Alcohol என பெயர் சூட்டப்பட்டுள்ளது.வடக்கு கோவாவில் உள்ள காண்டொலிம் கிராமத்தில் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. நந்தன் குத்சத்கார் என்ற தொழிலதிபர் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார். இந்த அருங்காட்சியகத்தில் கோவாவின் பாரம்பரிய மதுபானமான ஃபெனி முதல் சர்வதேச மதுபான பிராண்டுகள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோவா மக்களின் சிறப்பான விருந்தோபலின் அடையாளமே மது விருந்துதான் என்கிறார் நந்தன். அதை மெய்ப்பிப்பது போல இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் அனைவருக்கும் ஃபெனி மதுபானம் தான் வெல்கம் ட்ரிங்க்.16ம் நூற்றாண்டில் பயன்படுத்தபட்ட மது குடிக்கும் கண்ணாடி பாத்திரங்கள், மதுவை அளவிடும் குடுவை, மண்பாண்டங்கள், ஆஸ்திரேலியாவின் படிக்க கண்ணாடிகள் என்று மது சார்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழங்கால மது தயாரிக்கும் உபகரணங்களுடன் மது தயாரிப்பின் பாரம்பரியம் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த வரலாற்று தகவல்களும் இங்கு உள்ளன. 

Related Stories:

More
>