இந்து கடவுள்களை நம்பாதவர்களுக்கு கோயில் சொத்துகளை செலவழிப்பதா?..ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சை

நாக்பூர்: ஆர்எஸ்எஸ் நிறுவனத்தின் 96வது நிறுவன தின விழா மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசியதாவது: தென்னிந்தியாவில் முழுக்க முழுக்க கோயில்கள் அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன.அதே நேரம்,  பக்தர்களால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுகின்றன. கோயில் சொத்துக்கள், இந்து கடவுள்களை நம்பாத இந்துக்கள் அல்லாதவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, கோயிலை நிர்வகிக்கும் உரிமை இந்து பக்தர்களிடமே தரப்பட வேண்டும்.

கொரோனாவிற்கு பிறகு குழந்தைகளிடம் கூட அதிகளவில் செல்போன் காணப்படுகிறது. ஆனால், அதில் வெளியாகும் ஓடிடி தளங்களில் என்ன காட்டுவது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லாமல் உள்ளது.நாட்டின் மக்கள் தொகை கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். புதிய மக்கள் தொகை கொள்கையானது அடுத்த 50 ஆண்டு காலத்துக்கானதாகவும். அனைவருக்கும் சமமானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>