ஒரு ஓட்டு மட்டும் வாங்கி பாஜக வேட்பாளர் படுதோல்வி.. #ஒத்த_ஓட்டு_ பாஜக ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்!!

கோவை: தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று பாஜக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்ததை அடுத்து, #ஒத்த_ஓட்டு_ பாஜக என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கோவை குருடம்பாளையம் ஊராட்சிமன்ற 9வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் போட்டியிட்டார். கார் சின்னத்தில் போட்டியிட்ட கார்த்திக் குருடம்பாளையம் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித்ஷா படத்தை வைத்து பிரச்சாரம் செய்தவர்.  

இவர் இந்த தேர்தலில் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.ஒரு ஓட்டு வாங்கிய பாஜ வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, சகோதரர்கள் என 5 பேர் உள்ளனர். அவரையும் சேர்த்தால் மொத்தம் 6 பேர். இதுதவிர அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் இருக்கலாம். ஆனால் அவர் ஒரு ஓட்டு மட்டும் வாங்கியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அவரது குடும்பத்தாரே அவருக்கு வாக்கு செலுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் கார்த்திக்கின் படுதோல்வி இணையத்தில் கேலிக்கு உரியதாக மாறியுள்ளது. அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டதுதானா? வேறு யாரேனும் தெரியாமல் போட்டனரா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.இதை யடுத்து, #ஒத்த_ஓட்டு_ பாஜக, #Single_ Vote_ BJP  என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Related Stories: