பாவேந்தர் பாரதிதாசனை கவுரவிக்கும் வகையில் சிறந்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும்: முதல்வருக்கு பேரன் கோரிக்கை

சென்னை: பாவேந்தர் பாரதிதாசனை கவுரவிக்கும் வகையில், சிறந்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என முதலமைச்சரிடம் பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், பாவேந்தர் பாரதிதாசனின் மூத்த பேரன் கவிஞர் புதுவை கோ.செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ் வளர்ச்சிக்காக முதலமைச்சர் முன்னெடுக்கும் பணிகளுக்காக நேரில் சந்தித்து நேற்று நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பெரியார் மற்றும் அண்ணாவை போன்று உயர்ந்த இடத்தில் வைத்து போற்றி பாராட்டி உள்ளார். அதனடிப்படையில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களை கவுரவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோன்று பாவேந்தர் பாரதிதாசனை கவுரவிக்கும் வகையில் அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும் என்று முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். மேலும், பாவேந்தர் தொடர்பான பணிகளையும், தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளையும், தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: