ஆந்திராவில் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் : முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல்!!

ஹைதராபாத் :ஆந்திராவில் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த நாள் முதல் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறார்.அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி  தொடங்கி வைத்துள்ளார்.

 Swechha (சுதந்திரம்) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் 7 -12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், இடைநிலை கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் இலவச நாப்கின் வழங்கப்படுகிறது. சுமார் 10 லட்சம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் பத்து சானிடரி நாப்கின்கள் வீதம் வழங்கப்பட உள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மாநிலம் முழுவதும் 10,000 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகாரிகள் நாப்கின்களை விநியோகிப்பார்கள்.பெண்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: