பெள்ளத்திகம்பை மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்று-சப்-கலெக்டர் வழங்கினார்

மஞ்சூர் : மஞ்சூர் அருகே உள்ள பெள்ளத்திகம்பை மலைவாழ் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றுகள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி, கோரகுந்தா கோழிமந்து, பெள்ளத்திகம்பை, கூர்மையாபுரம், தனியகண்டி உள்ளிட்ட பகுதிகளில் கோத்தர், இருளர், தோடர் உள்ளிட்ட மலைவாழ் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றன்ர்.

இதில், பெள்ளத்திகம்பை கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், ஏற்கனவே சிலருக்கு வருவாய்துறை சார்பில் பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகள் உள்பட சிலர் தங்களுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தல் பேரில் இவர்களுக்கு சாதிச்சான்று வழங்க வருவாய்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று சப்-கலெக்டர் மோனிகா ரானா, குந்தா தாசில்தார் மகேஸ்வரி ஆகியோர் பெள்ளத்திகம்பை கிராமத்திற்கு நேரில் சென்று பள்ளி, மாணவ, மாணவிகள் உள்பட 10 பேருக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கினர்.இதில், வருவாய் ஆய்வாளர் வேடியப்பன், கிராம நிர்வாக அலுவலர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, சப்-கலெக்டர் மோனிகா ரானா மஞ்சூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் குந்தாபாலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கு ஆகியவற்றுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

Related Stories: