கவிஞர் லீனா மணிமேகலை பாஸ்போர்ட் முடக்கம் - பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாஸ்போர்ட்டை முடக்கிய உத்தரவை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறிய கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கில் லீனாவின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆராய்ச்சி பணிக்காக கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல உள்ளதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: