விபத்துகளை குறைக்க, ஓய்வு அளிக்க லாரி டிரைவர்களுக்கு 12 மணி நேர வேலை: நிதின் கட்கரி பரிந்துரை

புதுடெல்லி: சாலை விபத்துகள் குறைய வேண்டுமென்றால் பைலட்டுகள் போன்று லாரி டிரைவர்களுக்கு வேலை நேரம் நிர்ணயிக்க வேண்டும் என்று ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள் ஓய்வில்லாமல் வாகனத்தை ஓட்டி செல்வதால் நெடுஞ்சாலைகளில் கவனக்குறைவால் விபத்துகள் நிறைய நடக்கிறது. இதனால், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பயணிக்கும் விமான பைலட்டுகள் போன்று லாரி டிரைவர்களுக்கும் வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘சாலை விபத்துகளை குறைக்க வேண்டுமென்றால் விமான பைலட்டுகள் போன்று லாரி டிரைவர்களுக்கும் வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். அது பற்றி அதே போன்று டிரைவர்கள் உறங்கினால் அதை கண்டுபிடித்து எச்சரிக்கும் ஐரோப்பிய தரத்திலான சென்சார் கருவிகளை சரக்கு லாரிகளில் பொருத்துவது  குறித்து லாரி உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>