கடமலைக்குண்டு அருகே ஒதுங்கினால் விபத்து உறுதி: சாலையோர பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

வருசநாடு: கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி-குமணன்தொழு சாலையோரத்தில் உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுவதாக வாகன ஓட்டிகள் புகார் ெதரிவித்துள்ளனர்.கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி கிராமத்திலிருந்து கோம்பைத்தொழு, குமணன்தொழு ஆகிய கிராமங்களுக்கு செல்ல சாலை உள்ளது. மேகமலை வனச்சரக அலுவலகம் அருகே குமணன்தொழு சாலையில் இருந்து மூலவைகை ஆறு மற்றும் தோட்டத்திற்கு செல்ல பாதை அமைந்துள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கரட்டுபட்டியில் இருந்து குமணன்தொழு வரையிலான பகுதியில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை உயர்த்தப்பட்டதால், பக்கவாட்டு பகுதிகள் மிகவும் பள்ளமாக உள்ளன.

இதன் காரணமாக குமணன்தொழு சாலையில் இருந்து பிரிந்து தோட்டத்திற்கு செல்லும் பாதை பள்ளமாக மாறியது. குமணன்தொழு சாலையில் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் இறங்கி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் நிகழ்கின்றன. எனவே விபத்துக்களை தவிர்க்க சாலையோரத்தில் மண்ணை மேவி பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: