விக்கிரவாண்டியில் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல.. தேனடை.. வட்டாட்சியர் தகவல்

விழுப்புரம்: கே.ஆர்.பாளையத்தில் குடிநீர் கிணற்றில் இருந்தது மனித கழிவுகள் அல்ல தேனடை என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டை உளுக்கியது. வேங்கைவயல் விவகாரம் தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திறந்தவெளி கிணறிலிருந்து மோட்டார் மூலம் 100 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீருக்கு பயன்படுத்தும் திறந்தவெளி கிணற்றில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரைத்தான் கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநியோகிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்து கிணற்றில் மலம் கழித்ததாக மக்கள் குற்றம் சாடியுள்ளார். புகார் குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் வட்டாட்சியர்; கே.ஆர்.பாளையத்தில் குடிநீர் கிணற்றில் இருந்தது மலம் அல்ல தேனடை. காவல், வருவாய் துறையினர் நடத்திய சோதனையில் கிணற்றில் தேனடை இருந்தது தெரியவந்துள்ளது.

The post விக்கிரவாண்டியில் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல.. தேனடை.. வட்டாட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: