மீண்டும் வீட்டு சிறையில் மெகபூபா முப்தி அடைப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அம்மாநில முன்னாள் முதல்வர்களான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பல மாதங்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சமீபத்தில் ஹுரியத் பிரிவினைவாத அமைப்பின் மூத்த தலைவர் கிலானி காலமானார். இறுதி சடங்கின் போது அவரது உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டது குறித்து காஷ்மீர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு மெகபூபா கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் ஒன்றிய அரசை விமர்சித்து வந்த நிலையில், மெகபூபா நேற்று மீண்டும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெகபூபா டிவிட்டரில், ‘காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை எனக்கூறி நான் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். இதன் மூலம், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக ஒன்றிய அரசு கூறியது பொய் என்பது நிரூபணமாகி உள்ளது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: