கள்ளக்காதலியை திருமணம் செய்ய மனைவியை கொலை செய்த வியாபாரி: போலீஸ் விசாரணையில் குட்டு அம்பலம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் அருகே மயிலாப்பூரை சேர்ந்தவர் நிஜாம் (39). அந்த பகுதியில் கோல்டு கவரிங் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி சுமய்யா (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே நிஜாமுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. தொடர்ந்து கள்ளக்காதலியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இந்த விவரம் மனைவி சுமய்யாவுக்கு தெரியவந்தது. அதனால் அடிக்கடி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நிஜாம் மனைவி சுமய்யாவின் கழுத்ைத நெரித்தார். இதில் அவர் மூச்சுதிணறி மயக்கமானார். இதையடுத்து நிஜாம் அக்கம்பக்கத்தினரிடம் மனைவி சமையல் அறையில் திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறினார். உடனே அவர்கள் சுமய்யாவை மீட்டு கொல்லம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமய்யா பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், சுமய்யா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இது உறுதியானது. இதையடுத்து நிஜாமை போலீசார் கைது செய்தனர். பின்னர்  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Related Stories: