மரவள்ளி கிழங்கு தோசை

செய்முறை

Advertising
Advertising

பச்சரிசியுடன், வெந்தயத்தை கலந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கவும். அரிசி, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும். பின்னர் மரவள்ளிக்கிழங்கையும் அரைத்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும். இரண்டரை மணி நேரம் மாவை ஊற வைக்கவும். தோசைக்கல் சூடேறியதும் மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி பொன்முறுவலாய் எடுக்கவும்.இதம் தரும் இனிப்பான சுவையில் மரவள்ளிக்கிழங்கு தோசை ரெடி.