முக்கிய செய்தி சென்னை சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு: ஆகஸ்ட் 5 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு Jul 22, 2021 சுஷில் ஹரி பள்ளி சிவாஷங்கர் செபு பொகோ நீதிமன்றம் சென்னை: சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 5 வரை நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் வேனில் சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போது ஆதரவாளர்கள் சூழ்ந்து முழக்கமிட்டுள்ளனர். பெண்கள் அழுகுரலோடு பாபா, பாபா என வேனில் இருந்த சிவசங்கர் பாபாவை பார்க்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். நேற்று சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தினர். 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3 ஆசிரியைகள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் 2 ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணை நடத்தப்பட்ட ஆசிரியர்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது. இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், இவர் மீது 3 போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு போக்சோ வழக்கில் மட்டும் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டாவது போக்சோ வழக்கில் சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். எனவே புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவருக்கு ஆகஸ்ட் 5 வரை நீதிமன்ற காவல் நீட்டித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3 ஆசிரியைகள் மட்டும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எனவே 2 ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணை நடத்தப்பட்ட ஆசிரியர்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார்
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
கனமழையும் இருக்கு… வெப்ப அலையும் இருக்கு!.. அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. 7ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக் குழு அமைப்பு
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்ப்பு: போக்குவரத்து துறை தகவல்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?