காளான் சோயா பிரியாணி

செய்முறை

Advertising
Advertising

குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் காளான் மற்றும் சோயாவை சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து அரைத்த தக்காளியை சேர்த்து தேங்காய்ப்பால், தயிர் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை சேர்த்து அதன்மேல் கொத்தமல்லி, புதினா, நெய், Fried onion தூவி குங்குமப்பூ சாறை மேலே ஊற்றி 15 நிமிடம் மிதமான சூட்டில் தம் போட்டு இறக்கினால் காளான் சோயா பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் குருமா சேர்த்து பரிமாறவும்.