ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் டோஸை செலுத்திக்கொள்ள அனுமதி: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகின்ற ஜூலை மாதம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கும் அங்கு பணிபுரியம் ஊழியர்களுக்கும் விரைவாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை செலுத்திக்கொள்ள 84 நாட்கள் காத்திருக்கவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை 28 நாட்கள் இடைவெளிவிட்டு செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: