பினராயி விஜயன் வெளிநாட்டுக்கு சென்றது எனக்குத் தெரியாது: கவர்னர் சொல்கிறார்

திருவனந்தபுரம்: பினராயி விஜயன் வெளிநாட்டுக்கு சென்ற விவரம் தனக்குத் தெரியாது என்று கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறினார். கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய மனைவி கமலா விஜயனுடன் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென துபாய்க்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து இந்தோனேஷியா உள்பட வேறு சில நாடுகளுக்கும் அவர் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அவரது பயண விவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று கொச்சியில் கூறியது: முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டுக்கு சென்றது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதற்கு முன்பு வெளிநாட்டுக்கு சென்றபோதும் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து கவர்னர் அலுவலகத்திற்கு விவரங்கள் எதுவும் தருவதில்லை என்பது குறித்து ஏற்கனவே ஜனாதிபதியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பினராயி விஜயன் வெளிநாட்டுக்கு சென்றது எனக்குத் தெரியாது: கவர்னர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: