நல்ல நாட்கள் வரவில்லை; இனி மோடி வென்றால் கறுப்பு நாட்கள் வரும்: உத்தவ் தாக்கரே விளாசல்

மும்பை: ‘மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு கறுப்பு நாட்களை காண வேண்டியிருக்கும்’ என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.

மக்களவை தேர்தல் குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாஜ அரசு தோற்கடிக்கப்பட்டால், நாட்டின் எதிர்காலம் அமைதியாக இருக்கும், ஜனநாயகம் செழிக்கும். இல்லாவிட்டால், நாடு கறுப்பு நாட்களை காண வேண்டியிருக்கும். இதுவரை பாஜ ஆட்சியில் நல்ல நாட்கள் வரவில்லை. ஆனால் கறுப்பு நாட்கள் நிச்சயம் வரும்.

மற்ற கட்சிகள் அனைத்தும் ஊழல்வாதிகளை நீக்கி கட்சியையும் நாட்டையும் சுத்தப்படுத்தி வருகின்றன. ஆனால் பாஜ மட்டும்தான் ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளிக்கிறது. அனைத்து தூசி, அழுக்கை உறிஞ்சும் வாக்யூம் கிளீனர் போல பாஜ அனைத்து ஊழல்வாதிகளையும் இழுத்துக் கொள்கிறது. இவ்வாறு கூறி உள்ளார்.

The post நல்ல நாட்கள் வரவில்லை; இனி மோடி வென்றால் கறுப்பு நாட்கள் வரும்: உத்தவ் தாக்கரே விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: