பிரியங்கா காந்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி

புதுடெல்லி: `யார் பொறுப்பு?’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமருக்கு மக்கள் முதலில் முக்கியமல்ல. அரசியல் தான் முக்கியம். உண்மையை பற்றி அவருக்கு கவலை இல்லை. ஆனால், தன்னை விளம்பரம்படுத்துவதே முக்கியம். திறமையான அரசு என்பதின் அர்த்தம், நெருக்கடியின் போது பொறுப்பேற்று கொண்டு, நடவடிக்கை எடுப்பதாகும். ஆனால், பிரதமர் மோடியின் அரசு தொற்றின் ஆரம்பம் முதலே உண்மையை மறைத்து, பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது.  உலக நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த போது செயல்படாமல் இருந்து விட்டு, 2021 ஜனவரியில் தடுப்பூசிக்கு பிரதமர் ஆர்டர் கொடுக்கிறார். இதனை கோடைக் காலத்திலேயே செய்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். பிரதமர் ஒரு கோழையை போல் செயல்படுகிறார். கொரோனாவுக்கு எதிரான போரில் நிபுணர்கள், விமர்சகர்கள், கூட்டணி கட்சி, எதிர்க்கட்சியினரை அச்சமின்றி சேர்த்து கொண்டு செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>