பொன்மொழிகளில் உருவான கலைஞர், மு.க.ஸ்டாலின் படங்கள்: குஜிலியம்பாறை அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் அசத்தல்

குஜிலியம்பாறை: பொன்மொழிகள் மூலம் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவ படங்களை வரைந்து குஜிலியம்பாறை அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சபரிநாதன் (37). இவர் கலைஞர் கூறிய பொன்மொழிகளான, ‘நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்’ என்பது உள்ளிட்ட 25 பொன்மொழிகளின் எழுத்துக்கள் மூலம் கலைஞர் மு,கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உருவப் படங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து சபரிநாதன் கூறுகையில், ‘‘முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவாகவும், தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் படத்தையும் சேர்த்து வித்தியாசமான முறையில் ஓவியம் வரைய வேண்டும் என தோன்றியது. அதை தொடர்ந்து ஒரு சார்ட் அட்டையில் கலைஞரின் பொன்மொழிகளை எழுதி, பின்னால் கருப்பு, சிவப்பு கட்சி கொடி வண்ணமாகவும், அதில் கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஓவியத்தை வரைந்தேன்’’ என்றார்.

சபரிநாதன் கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட அளவில் சிறந்த ஓவிய நல்லாசியருக்கான விருதை பெற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் இவரிடம் பயிற்சி பெற்ற 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிறந்த ஓவிய படைப்புகளுக்கான விருதை மாவட்ட அளவில் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: