செட்டிநாடு காளான் கிரேவி

செய்முறை

Advertising
Advertising

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின்பு சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாக வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்க விடவும். பிறகு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலாவை சேர்த்து, 10 நிமிடம் கழித்து காளானை சேர்த்து வதக்கவும். காளான் நன்றாக சுருங்கி வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான செட்டிநாடு காளான் கிரேவி ரெடி.