புதுச்சேரியில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு 31ம் தேதி வரை நீட்டிப்பு: கவர்னர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி:புதுச்சேரியில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை வருகிற 31ம் தேதி வரை நீட்டித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அறிவித்துள்ளார்.  இது குறித்து புதுச்சேரி கவர்னரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொது அடைப்பு மே 24ம் தேதி வரை அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவையை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை மக்கள் இடைவெளி விட்டு வாங்கிச் செல்லும் அளவிற்கு மதியம் 12 மணி வரை அந்த கடைகள் இயங்குகின்றன. இதை பயன்படுத்தி மக்கள் கூட்டம் கூடாமல் இடைவெளி விட்டு வாங்கிச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேவையான அத்தியாவசியப் பொருட்களை தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள கடைகளில் வாங்கி, அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்கவும். பால், மருந்து போன்றவைகளுக்கு தடையில்லை.  பொதுமக்கள் துணையோடு ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31ம் தேதி வரை தொடரும். நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்து அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: