ரெம்டெசிவிர் மருந்துக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த இன்ஜினியர்: கோவை தனியார் மருந்து நிறுவனம் மீது போலீசில் புகார்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை வைகைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (26). இன்ஜினியரிங் பட்டதாரி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் மாவட்டம் மேட்டூரில் சிகிச்சை பெறும் மாமாவுக்காக கடந்த 15ம் தேதி  ஆன்லைனில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்குமா? என கிஷோர் தேடியுள்ளார். அப்போது, கோவை தனியார் மருந்து நிறுவனம் ஒன்று, 6 டோஸ்ரெம்டெசிவிர் மருந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்பது தெரிந்தது.

இதை பார்த்த கிஷோர், முன்பணமாக ரூ.10,500ஐ ஆன்லைனில் அந்த நிறுவனத்துக்கு அனுப்பியதாகவும், மருந்தை அனுப்பி வையுங்கள். மீதி பணத்தை தந்து விட்டு வாங்கிக் கொள்கிறேன் எனவும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால்,  அந்த நிறுவனம் அனைத்து பணத்தையும் கட்டினால்தான் மருந்து அனுப்பப்படும் என தெரிவித்ததோடு தொடர்பையும் துண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிஷோர், கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: