சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுகவைச் சேர்ந்த அம்மா பேரவை மாநில துணைச் செயலாளரும்-புதுக்கோட்டை மாவட்ட மாணவர் அணி, அம்மா பேரவை துணைச் செயலாளரும் மாவட்ட முன்னாள் கவுன்சிலருமான வழக்கறிஞர் டி.பன்னீரும்- அதிமுகவைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள் நல்லூர் சுப்பிரமணி, வீரம்பட்டி ராஜா ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், விராலிமலை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மண்டையூர் மகேந்திரன், துணை அமைப்பாளர் நல்லூர் ஸ்டாலின் (எ) அருள், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.
