சென்னை: தடகள குழுப்போட்டியில் பதக்கம் வென்ற தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை டிஜிபி வெங்கடராமன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், பிஏபி தலைமையகத்தில் கடந்த 7ம் தேதி முதல் மார்ச 12ம் தேதி வரை 2025-26 ஆண்டிற்கான 74வது அனைத்திந்திய காவல்துறை தடகள குழுப்போட்டிகள் நடந்தன.
இந்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் 46 காவல் அதிகாரிகள், காவலர்கள் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் உள்ளிட்ட 9 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டிகளில் பதக்கம் வென்ற தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் வெங்கடராமன் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிகழ்வின் போது காவல்துறை இயக்குநர் பாலா நாகதேவி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
