காரைக்குடி அயிரை மீன் குழம்பு

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு ஏறிய பின்பு, வெந்தயம், சோம்பு போடவும். பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்பு தக்காளி சேர்க்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள் போட்டு கிளறவும். பின்பு புளி கரைசலை ஊற்றவும். தேவையான உப்பைப் போட்டு கொதித்த பின்பு தேங்காய்ப் பாலை அதில் ஊற்றவும். பின்பு நன்றாக கழுவி வைத்த அயிரை மீனை அதில் போடவும். இரண்டு கொதியில் அதை இறக்கி வைக்கவும். கொத்தமல்லியை தூவவும்.