உடல் வறட்சியை தடுக்கும் தர்பூசணி!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

நாம் சாதாரணமாக நினைக்கும் அசாதாரணமான பழம் தர்பூசணி. இதில் 91% நீர்ச்சத்து இருப்பதால் ‘தண்ணீர்ப்பழம்’ என்று பரவலாக அழைக்கப்படுகிறது. தர்பூசணி உடல் வறட்சியைப் போக்கி நீர்ச்சத்தை அதிகரித்து உடனடி ஆற்றல் தருவதோடு உடல் வெப்பம், ரத்த அழுத்தத்தையும் சீராக வைக்கிறது.

விட்டமின்கள் ஏ, பி1, பி-2, பி-3, பி-5, பி-6, சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், லைக்கோவின் என பல சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன.தர்பூசணியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் செல்களை பழுதில்லாமல் பராமரிப்பதுடன் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றன. இதனால் மாரடைப்பு வராமல் காக்கப்படுகிறது. நோய் எதிர்ப்புத்திறன் வலுவடைகிறது. இதிலுள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகக் கல் உருவாகாமலும் தடுக்கிறது.

கரோட்டினாய்டு மற்றும் லைக்கோவின் என்னும் வேதிப்பொருள் புற்றுநோய், கிருமிகளை எதிர்த்து செயலாற்றுகிறது. குறிப்பாக புராஸ்டேட் சுரப்பி, கருப்பை, மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுப்பதில் இதன் பங்கு அதிகம்.தர்பூசணியில் உள்ள விட்டமின் ‘ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது. குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.

பல் ஈறுகள் உறுதியாகவும், காயங்கள் விரைவில் ஆறவும் தர்பூசணியில் உள்ள வைட்டமின் ‘சி’ உதவுகிறது. குறைவான கலோரி உள்ள பழம் என்பதால் உடல் பருமன் உள்ளோர் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறையும். தோலில் கரும்புள்ளி, அழற்சியால் உண்டான அடையாளங்கள் இருந்தால் தர்பூசணி சாற்றை முகத்தில் தடவி வந்தால் சரியாகும். புரதச்சத்தை ஆற்றலாக மாற்றவும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் தர்பூசணியில் உள்ள விட்டமின் பி-6 உதவுகிறது.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

Related Stories: