அத்லெடிகோ பார்சிலோனா டிரா

கேம்ப் நோ,: ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் தொடரில் அத்லெடிகோ மாட்ரிட்  எப்சி பார்சிலோனா அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. பார்சிலோனா அணியின் சொந்த ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. பார்சிலோனா முன்னாள் நட்சத்திரம் லூயிஸ் சுவாரெஸ் முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக அத்லெடிகோ மாட்ரிட் சார்பில் களமிறங்கினார். லியோனல் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணி பெரும்பாலான நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், எதிரணியின் தற்காப்பு அரணை தர்த்து கோல் அடிக்க முடியாமல் திணறியது.

விறுவிறுப்பான இப்போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால் 0-0 என டிரா ஆனது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், தலா 35 லீக் ஆட்டத்தில் விளையாடி உள்ள அத்லெடிகோ மாட்ரிட் (77 புள்ளி), பார்சிலோனா (75 புள்ளி) முதல் 2 இடங்களில் உள்ளன. எனினும், 34 லீக் ஆடத்தில் விளையாடி 74 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள ரியல் மாட்ரிட் அணிக்கும் பட்டம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால், கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: