அன்னவாசல் அருகே குளத்துமடை கால்வாயில் 4 மலைப்பாம்புகள் தஞ்சம்-பொதுமக்கள் பீதி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பெரியகுளத்துமடை கால்வாயில் நான்கு மலைப்பாம்புகள் பதுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை, தீயணைப்புதுறையினர் பல மணி நேரம் போராடியில் பாம்புகளை பிடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள பெரிய குளத்துமடையில் உள்ள கால்வாயில் ஒரே இடத்தில் நான்கு மலைப்பாம்புகள் இருந்ததை நேற்று அப்பகுதிக்கு தண்ணீர் திறக்க சென்றவர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை வனத்துறை, இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் நான்கு மலைப்பாம்புகளும் குளத்து மடை உள்பகுதிக்குள் சென்று விட்டதால் அதை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் ஒருபுறம் புகை மூட்டத்தை ஏற்படுத்தியும் பாம்புகள் வெளியே வரவில்லை. இதனையடுத்து வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்புதுறை.வனத்துறை அலுவலர்களும் பாம்பை பிடிக்க முடியாமல் ஏமற்றத்துடன் சென்றனர்.

Related Stories: