ஹோலியும் ராதையும்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

ஹோலி வடநாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. இந்த பண்டிகையில் மூன்று முக்கிய நபர்கள் ஹோலிகா, கிருஷ்ணன். ராதா. ஹோலி இரண்டு நாள் பண்டிகை. முதல் நாள் இரவு சொக்கப் பானை கொளுத்தி, மறுநாள் வண்ண நீரை பாய்ச்சி கொண்டாடுகிறார்கள். சரி... இனி கதைக்கு வருவோம். தன் அழிவு கிருஷ்ணரால் என்று நாரதர் மூலம் அறிகிறான் கம்சன். கிருஷ்ணனைக் கொல்ல தன் சகோதரி ஹோலிகாவை நாடுகிறான். ஹோலிகா நெருப்பினுள் இருந்தாலும் அவளை நெருப்பு தீண்டாது. கிருஷ்ணனை தூக்கிக் கொண்டு நெருப்பில் பாய்கிறாள். ஆனால் நெருப்பு அவளை பஸ்பமாக்கிவிடுகிறது.

கிருஷ்ணனை கொல்ல எண்ணி, இறுதியில் தானே அழிந்த ஹோலிகாவின் நினைவாகத்தான் சொக்கப்பானை எரிக்கிறார்கள். கிருஷ்ணனும் ராதாவும் காதலர்கள். ஆனால் கிருஷ்ணனோ கருமை நிறம், ராதை சிகப்பு நிறம். ராதா தன்னை காதலிக்கிறாளா என்று தன்னுள் இருக்கும் சந்தேகத்தை போக்க அவள் மீது கருப்பு வண்ணம் பூசுகிறார். இதை எதிர்பார்க்காத ராதா கோபப்படாமல் சிரித்துவிட்டு, ‘நானும் உன்னைப் போல் கருப்பாகி விட்டேன். இனி என் காதலை நீ சந்தேகிக்க மாட்டாய்’ என்றாள்.

சந்தோஷத்தில் கிருஷ்ணன், பல வண்ணங்களை தண்ணீரில் கலந்து அவள் முகத்தில் பீய்ச்சுகிறான். இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக ஒருவர் மீது, மற்றொருவர் வண்ணங்களை பூசிக் கொள்கின்றனர்! ராதா, விஷ்ணுவின் அஷ்ட சக்திகளில் ஒருத்தி எனவும், திருமகளே ராதாவாக அவதரித்தாள் எனவும் பலருக்கு நம்பிக்கையுண்டு!பிருந்தாவனில் சேவாகுஞ்சம், துளசித் தோட்டம் உள்ளது, இங்கு ராதா கிருஷ்ணன் லீலைகள் இரவில் இன்றும் நடப்பதாக கூறுகின்றனர்.

இருட்டிய பின், யாரும் இதனுள் செல்ல மாட்டார்கள்! மாலையில் சேவா குஞ்சத்தில் சாப்பிட பிரசாதமும், தண்ணீரும் புதுமண தம்பதியருக்கு வைப்பது போல் இன்றும் வைக்கின்றனர்! நடமாட்டம் இல்லாத வேளையில் இன்றும் ராதா, கிருஷ்ணன் ஜோடி இங்கு வந்து ஓடிப் பிடித்து விளையாடி, ஜோடியாக நடனமாடி களைத்து படுத்துறங்கி செல்வதாக ஐதீகம்! பிருந்தாவனில் லவ் மந்திர் என ஒரு இடம் 54 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இங்கு கிருஷ்ணன் மற்றும் ராதையின் வாழ்க்கை வரலாற்றை சிற்பங்களாக உருவாக்கி வைத்துள்ளனர். இங்குள்ள சிலைகள் சுத்தமான வெள்ளை சலவைக் கல்லாலானவை. இதற்கு ப்ரேம் மந்திர் என்று மற்றொரு பெயரும் உண்டு.

- ராஜிராதா, பெங்களூரு.

Related Stories: