தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை: தோட்டத்தில் வீசி எறியும் அவலம்

தேனி: தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த தக்காளிகளை பறித்து எறிந்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூர், கருவேல்நாயக்கன்பட்டி, அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், நாகலாபுரம், கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம் என பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைகளில் தக்காளி கிலோ ஒன்று ரூ.5க்கு விற்கப்படுவதால் விலைக்கு வாங்கும் மொத்த வியாபாரிகள் கிலோ ரூ.1க்கும், கிலோ ரூ.2க்கும் வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தக்காளி விவசாயத்திற்காக செய்த செலவு, தக்காளி பறிப்பு செலவு உள்ளிட்டவைக்கு கூட கட்டுபடியாகததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த தக்காளிகளை பறித்து சந்தைக்கு கொண்டு சென்றால் பெரும் நஷ்டம் ஏற்படும் என கருதி, தோட்டங்களிலேயே வீசி எறியும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: