எங்களுக்கு வேற வழி தெரியல... இரவு நேர, வார இறுதி லாக் டவுனை அறிவித்த மராட்டிய அரசு: மால்கள், உணவகங்கள், பார்களை மூட உத்தரவு!!

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 57,000த்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தினசரி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல வாரஇறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை லாக்டவுன் கடைபிடிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில் மால்கள், உணவகங்கள், பார்களை மூட அம்மாநில அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே போல வழிபாட்டு தலங்களையும் மூட அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு லாக்டவுனிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அசோக் கெலாட் தலைமையைிலான அரசு கட்டுபாடுகளை அறிவித்துள்ளது. திரையரங்குள், சினிமா ஹால்ஸ் மற்றும் மல்டிப்ளக்ஸ் உள்ளிட்டவை உடனடியாக மூடப்படுகிறது. திருமணங்களில் 100 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி கிடையாது. அம்மாநிலத்துக்கு வருவதாக இருந்தால் ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை அவசியம். 1ம் முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் தேவைப்பட்டால் இரவு ஊரடங்கை அமல்படுத்தி கொள்ளலாம் ஆனால் அரசின் அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: