பங்குனி உத்திர திருநாள் கோலாகலம்; தமிழக மக்களுக்கு அமித்ஷா, ஜே.பி.நட்டா வாழ்த்து

டெல்லி: பங்குனி உத்திர திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு அமித்ஷா, ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில் இன்று பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் கோவிலில் ஒன்று திரண்டு முருகனுக்கு வழிபாடு செய்து வருகின்றனர். பெரும்பாலான கோவில்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிலர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலேயே முருகனை வழிபாடு செய்து வருகின்றனர். பங்குனி உத்திர திருநாளை ஒட்டி தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமித்ஷா வாழ்த்து

இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்!. இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான பங்குனி உத்திரம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல்! வீர வேல்! என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜே.பி.நட்டா வாழ்த்து  

ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; தமிழக சகோதர சகோதரிகளுக்கு புனித பண்டிகை பங்குனி உத்திரம் நன்னாளில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த திருவிழா தெய்வீக திருமணங்களின் புனித பவுர்ணமி. தமிழக மக்கள் எல்லாம் வலமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வேல் வேல் வெற்றி வேல் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: