பல மடங்கு அதிகரிக்கும் இந்திய விமானப்படையின் பலம்: மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகை..!

டெல்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து அடுத்த வாரம் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருகின்றன. அடுத்த மாதம் 9 விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் இந்திய விமானப் படையின் பலம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்க உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோல்ட் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.59 ஆயிரம் கோடியில் இந்த விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, இதுவரை 11 ரஃபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

அந்த விமானங்கள் அம்பாலா விமானப் படை தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தவிர இந்திய விமானப் படை வீரர்கள் பயிற்சி பெறு வதற்காக 7 விமானங்கள் அளிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் 3 ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இந்த விமானங்களும் அம்பாலா விமானப் படை தளத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அடுத்த மாதம் 9 ரஃபேல் விமானங்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் இந்திய விமானப் படையின் பலம் பல மடங்கு அதிகரிக்கும். அண்டை நாடுகள் சீனா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காமல் அவ்வப்போது உரசலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் அதிநவீன ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை கூடுவது, இந்திய விமானப் படைக்கு பெரும் பலமாக அமையும். தற்போது புதிதாக வரவுள்ள ரஃபேல் விமானங்கள், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹசிமாரா விமானப் படை தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இவற்று டன் சேர்த்து ஹசிமாரா தளத்தில் 5 போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும். இதன் மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதற்கிடையில், ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க இந்திய அதிகாரிகள் பிரான்ஸ் சென்றுள்ளனர். வரும் 30 அல்லது 31-ம் தேதி இந்த விமானங்கள் இந்தியா வந்து சேரும்.

Related Stories: