சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகர்ஜுன கார்க்கே, சித்தராமையா உள்ளிட்ட 30 காங்கிரஸ் நட்சத்திர தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம்!!

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ் தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் தமிழக சட்டசபை போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ் தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலின் விவரம் பின்வருமாறு..

*காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி

*காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

*முன்னாள் மத்திய அமைச்சர் பி சிதம்பரம்

*கர்நாடக முன்னாள் அமைச்சர் சித்தராமையா

*காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி

*ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,

*மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகர்ஜுன கார்க்கே,

*காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

*தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர்,

*தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

*வீரப்ப மொய்லி,

*டி.கே.சிவகுமார்,

*மணிஷ் திவாரி,

*சஞ்சய் தத்

உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்த மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரின்பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த நட்சத்திர பரப்புரையாளர்கள் எப்போது தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Related Stories: