குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரியானா கூடுதலாக நீரை விடுவிக்க உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல் நாளை மறுநாள் அவசரமாக விசாரணை

புதுடெல்லி: சுத்திகரிக்கப்படாத நீரை யமுனையில் வெளியேற்றுவதை தடுக்கவும், டெல்லிக்கு வழங்கும் குடிநீரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான நீரை விநியோகிக்கவும் அரியான அரசுக்கு உத்தரவிடக்கோரி டிஜேஎல் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டு பட்டியிலிட்டுள்ளது.  டெல்லியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய டெல்லி மாநில அரசு அரியானாவிடமிருந்து நீரை பெற்று சுத்திரிப்பு செய்து விநியோகித்து வருகிறது. இதுபோன்று டெல்லிக்கு வழங்கும் நீரின் அளவை தற்போது அரியானா அரசு குறைத்துவிட்டது. இதனால் டெல்லியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரியானாவிலிருந்து தினசரி டெல்லிக்கு 609 எம்ஜிடி(மில்லியன் காலன்) பெறப்பட்டு வந்தது. இதனை தற்போது 479 எம்ஜிடி மட்டுமே வழங்குகிறது.

இதுதவிர, டெல்லிக்கு நிலத்தடி நீர் 90 எம்ஜிடி மற்றும் உப்பர் கங்கா கால்வாயிலிருந்து 250 எம்ஜிடி மட்டுமே கிடைக்கிறது. வழக்கமாக வாசிராபாத் பகுதியிலுள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் 674.50 ஆக இருக்கும். ஆனால், இது தற்போது 670.90 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக வாசிராபாத் மையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும் நீரின் அளவு குறைந்துவிட்டது. இது டெல்லி குடிநீரின் தேவையை அதிகரிக்கச்செய்து தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. இதுதவிர, யமுனையில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அரியானா அரசு வெளியேற்றி வருகிறது. இதனால் யமுனை ஆற்றில் அம்மோனியாவின் அளவு அதிகரித்து விஷத்தன்மை ஏறிவிடுகிறது என டெல்லி குடிநீர் வாரியத்தின் துணைத்தலைவர் ராகவ் சதா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதன்தொடர்ச்சியாக, தற்போது, இந்த வழக்கில் ஒரு இடையீட்டு மனுவை டெல்லி அரசு நேற்று தாக்கல் செய்தது. அந்த மனுவில் மேற்கண்ட பிரச்னைகளை கூறி டெல்லிக்கு போதுமான அளவு நீரை யமுனையில் வெளியேற்றவும், கழிவீரை யமுனையில் கலக்கச் செய்வதை நிறுத்துமாறும் அரியானா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளபட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்ஏ பாப்டே மற்றும் நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, வி ராமசுப்ரமணியம் அடங்கிய அமர்வு, டெல்லி அரசின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மனுவை மார்ச் 25ம் தேதி விசாரிக்க ஒப்புக்கொண்டு அன்றைய தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

Related Stories: