அமுல் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் “விலை மதிப்பற்றது” என்பது பொருளாகும்வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது. அமுல் நிறுவனம் பால், வெண்ணெய், நெய், தயிர், சாக்கலேட்டுகள் ஐஸ்கிரீம் ஆகியவற்றை விற்பனை செய்கிறது. இந்நிலையில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் செயல்படும் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் 64 ல் இருந்து ரூ. 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் என அனைத்து அமுல் பால் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு பால் விலை, சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
The post மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.
